Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நான் சொல்லுறத கேட்கல…. கோர்ட்டுக்கு போயிடாங்க…. இன்று MLAவை இழந்து விட்டார்கள் …!!

நான் சொல்லுவதை திமுக கேட்காததால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்து விட்டோம் என்று முதல்வர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் கொடுக்கட்டும்…. அப்போது நோய் தொற்று ஏற்படாது என்று தெரிவித்தேன்.

உடனடியாக அவரின் கட்சியினர் நீதிமன்றம் சென்று தீர்ப்பை வாங்கிக்கொண்டு அங்கொன்றும் , இங்கொன்றாக தான் நிவாரணம் வழங் கினார்கள். முழுமையாக நிவாரணம்  கொடுத்த மாதிரி தெரியல. விளம்பரம் தேடுவதற்காக  நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றாமல் நிவாரணம் வழங்கினார்கள்.

ஒரு தன்னார்வலர்கள் காவல்துறை எல்லாம் நிவாரணம் கொடுத்தார்கள். இதனால் தொற்று ஏற்பட்டதா? இல்லையா ? அரசாங்கம் மருத்துவ நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நான் சொன்னேன். அப்படி பின்பற்றமால் இருந்ததால் இன்று சுமார் 500 பேருக்கு மேல் நிவாரணம் கொடுத்தவர்கள் மூலமாக கொரோனா பரவியுள்ளது.

அதுமட்டுமல்ல இவர்களுடைய ஆணையை ஏற்ற அவரின் கட்சியைச் சேர்ந்த ( திமுக ) ஒருவர்,  பொறுப்பில் இருக்கின்றார். நிவாரணம் கொடுத்தார். இன்று தொற்று ஏற்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்து விட்டோம். நான் அறிவித்தபடி மருத்துவ நிபுணர்கள் குழு சொன்ன கருத்தை கேட்டிருந்தால், இன்றைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Categories

Tech |