விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்வி என்ற பெண் கடந்த 15 ஆம் தேதி நேரு வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் அறையில் இருந்து நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இல்லை ஆனால் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறி செல்வியிடம் ஏடிஎம் அட்டை வாங்கியுள்ளார்.
பிறகு அவரிடம் வேறு ஒரு அட்டையை கொடுத்ததுடன் சில நிமிடங்களில் அவரது கணக்கிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துள்ளார். இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் விசாரித்து வந்த காவல்துறையினர், 5 நாள்கள் கழித்து அதே ஏடிஎம் வாசலில் புதன்கிழமை அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.