சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுப்பிடிப்புக்காக சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பிரதீப்புக்கு மதிப்புமிக்க ‘இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் தண்ணீருக்கான சர்வதேச விருது’ எந்த ஒரு துறையிலும் நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாக அகற்றுவதற்கு, குறைந்த விலையில் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தண்ணீரை பேராசிரியர் பிரதீப்பின் குழுவினர் வழங்கியது. இதனால் பேராசிரியர் பிரதீப்புக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 12-ந் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வைத்து பேராசிரியர் பிரதீப் மற்றும் அவருடைய குழுவினருக்கு ரூ.2 கோடி ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் பேராசிரியர் பிரதீப் பத்மஸ்ரீ மற்றும் நிக்கேய் ஆசிய விருது பெற்றவர். இந்நிலையில் பேராசிரியர் பிரதீப் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் 1 கோடியே 20 லட்சம் மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.