Categories
உலக செய்திகள்

“ஐபிஎஸ் ஆக திரும்புவேன் முடியாவிட்டால் இப்படி மாறுவேன்” – உறுதியுடன் கூறும் பெண் போலீஸ்

பாஜக அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்தி வாதம் செய்த பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்ததோடு மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார்.

குஜராத் பாஜக அரசில் பாஜக எம்எல்ஏ குமார் கனானியின்  மகனை வாகன சோதனையில் நின்றிருந்த பெண் போலீஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தும் இந்த சம்பவம் தொடர்பான மாற்று  காரணம் குறித்தும் அவர் சில ஆங்கில இணைய தளங்களுக்கு கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “அழுத்தத்தின் காரணமாக நான் ஐபிஎஸ் அதிகாரியாக மாறத் தயாராக வருகிறேன். நான் எனது முடிவை மேல் அதிகாரிகளுக்கு கூறிவிட்டேன் அந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்துள்ளன அதில் ஒருவர் என்னை நீண்ட காலம் நீ வாழப் போவதில்லை எனவும் மிரட்டினார். மேலும் அவர்கள் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர 50 லட்சம் தரவும் பேரம் பேசினர்.

இதையடுத்து எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சூரத் காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தேன். நான் தங்கியிருக்கும் வீட்டின் முன்பு இப்போது  இரண்டு ஆண் காவலர்கள்  நிற்கிறார்கள். நான் தெருவில் நடந்து செல்லுகையில் என்னை சிலர் பின்தொடர்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி  கேட்டபோது அவர் கூறியது, “அதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது சிலர் “லேடி சிங்கம்” என்ற பெயரில் தவறான செய்தியை பரப்பியுள்ளனர் ஆனால் நான் எனது கடமையைத்தான் செய்தேன் இந்த சம்பவமானது எனக்குள்  இருந்த அதிகாரத்தை எனக்கு எடுத்து காட்டியுள்ளது. ஆகவே நான் ஐபிஎஸ் அதிகாரியாக மாறி திரும்ப வருவேன் ஒருவேளை நான் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தால்  ஒரு வழக்கறிஞராக அல்லது ஒரு பத்திரிக்கையாளராக மாறுவேன்”,என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |