ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தம்மை தூக்கிலிட வேண்டும் என்று கோரியும் அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜி மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த பொழுது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி சுனில்குமார் மனு அளித்தார். அதில் அவர் மதுவுக்கு அடிமையான தனது கணவர் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தகராறு செய்ததாகவும்,
அப்போது கீழே விழுந்த அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டதாகவும் குற்ற உணர்ச்சியால் அவதிப்படுவதால் தன்னை தூக்கிலிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் கைது செய்யப்பட்டார். தற்பொழுது அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.