ஆர்.எஸ் பாரதி கைது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவின் அமைப்பு செயலாளர் பாரதி கைது குறித்து சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், ஆர்.எஸ் பாரதி என் மீது ஊழல் புகார் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். எதுவுமே கொடுத்த மாதிரி எனக்கு தெரியல, ஏதோ ஒரு பேப்பரில் எழுதி கொண்டு கொடுத்து இருப்பர். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதை முழுசா போடுங்க. தயவு செய்து அவர் புகார் கொடுத்தால் உடனே போடாமல் உண்மை தன்மையை ஆய்வு செய்து ஊடகங்களும், பத்திரிகைகளும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும். வேண்டும் என்று அரசியல் செய்வதற்காக இவர்கள் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் மீது பழி சுமத்தினால் தானே இவரின் கட்சியை காட்டிக் கொள்ள முடியும். திமுக கட்சி என்று ஒன்னு இருக்குது, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார் என்று காட்டிக் கொள்வதற்காக இப்படி ஒரு அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள். உண்மையில் ஆர் எஸ் பாரதி என்ன டெண்டர்னு ஊழல்னு பெட்டிஷன் கொடுக்கிறாரு. இ- டெண்டர் என்பது யாருக்குமே தெரியாது. இ- டெண்டரை திறக்கும் போது தான் யாரு எடுத்துள்ளார்கள் என்று தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அப்படி கிடையாது, டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். அப்போ ஊழல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கு. திமுக ஆட்சியில் அப்படி நடந்தது, தங்களுடைய ஆட்சியில் நாங்களும் அப்படி நடத்தலாமே என நினைப்பது தவறு. இ- டெண்டர் யார் வேணாலும், தகுதியானவர்கள் அனைவரும் கலந்து கொண்டு எடுக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு, அதனால முழுவதும் சொல்ல முடியல. ஆகவே இது வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி என்றும் முதல்வர் தெரிவித்தார்.