Categories
உலக செய்திகள்

எனக்கு ஒன்றும் தெரில….! ”கைவிரித்த டிரம்ப்” விழிபிதுங்கும் அமெரிக்கர்கள் ..!!

கொரோனா தொற்றினால் நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளில் பாதுகாப்பு தன்மையை ஆய்வாளர்கள் பலர் எச்சரித்து வந்த நிலையில் அதிபர் உட்பட பலரும் இந்த மருந்து தான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட தற்போது அந்த மருந்தினால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தனது சொந்த வர்த்தக நலனை எண்ணி அதிபர்  விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லாமல் இந்த மருந்தை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான அறிக்கையை நான் பார்க்கிறேன் என்றுள்ளாராம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் “இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை சில நல்ல ரெபோர்ட்களும் உள்ளது ஆனால் இது நல்ல ரிப்போர்ட் இல்லை. இது குறித்து நாம் ஒருகட்டத்தில் முடிவெடுப்போம்” என கூறியுள்ளார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நோயாளிகளின் வென்டிலேட்டர் பயன்பாட்டை தவிர்க்க பயன்படுகிறது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஓஃப் ஹெல்த் நடத்திய ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மூலமே அதிக மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட , என்.ஐ.எச். அறிக்கையில், “கோவிட்-19 சிகிச்சைக்கான வாய்ப்புகள் தற்போது ஆய்வுகளில் இருக்கின்றது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்தலாமா என்பது பற்றி க்ளினிக்கல் தகவல்கள் போதாது,  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுத்த நோயாளியை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து என்.ஐ.எச். நிபுணர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் சேர்த்து கொடுப்பதை கண்டிக்கிறார்கள். காரணம் இதனால் நச்சுத்தன்மை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக்கழக ஆணையர் ஸ்டீபன் இது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதேவேளை, ட்ரம்ப் மீது காங்கிரஸ் உறுப்பினரான பில் பாஸ்க்ரெல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் , “கோவிட்-19க்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கை ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலாகும்.

 

அறிவியலை விட அரசியலுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவையே நாம் இப்பொது சந்திக்கிறோம் என்று மிகவும் கடுமையாக கூறியுள்ளார். ஆதாரங்களோடு கிடைக்கும் விஞ்ஞானமே நெருக்கடியதில் இருந்து மீள சிறந்த வழி ஆகும். நாம் இன்று கொண்டாடி வரும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், மருந்துகள்  பலதலைமுறைகளின்தலை சிறந்த பணியாகும் என்றுள்ளார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.

இந்நிலையில் ஆதாரம் எதுவும் இல்லாமல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ட்ரம்ப் பரிந்துரைத்தது பொறுப்பு இல்லாத செயல், நான் ஏற்கெனவே அமெரிக்க உணவு மருந்துக் கழகத்தை எச்சரித்தேன் , ட்ரம்பின் அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணியாதீர்கள் என்று. அறிவியலை நம்புவதை விட்டு அரசியலை நம்பினால் நாம் இன்னும் பல தேவையற்ற மரணங்களை சந்திக்க வேண்டியதுதான், வரலாறும் நம்மை மன்னிக்காது” என்று காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல் கூறியுள்ளார் .

Categories

Tech |