மலையாள நடிகைகளில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இவர் தேவராட்டம் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக்கை காதலித்தார். சமீபத்தில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.
அதன்படி 2022 ஆம் ஆண்டு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. இந்த வருடம் முழுவதும் நான் கற்றுக் கொண்டிருந்தேன். உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு யாரும் நிற்க மாட்டார்கள். ஒரு போதும் உங்களை நேசிக்க மறக்காதீர்கள். உங்களை முன்னிலைபடுத்தவும் வெட்கப்படாதீர்கள்.
இந்த இரண்டு விஷயங்களை இந்த வருடத்தில் நான் கற்றுக் கொண்டேன். மேலும் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி எனக்கு மிகவும் சாகசம் நிறைந்ததாக அமைந்தது. எனது நண்பரை திருமணம் செய்து மற்றொரு படி முன்னேறி இருக்கிறேன். இப்போது மிகவும் பாதுகாப்பாகவும், திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். இது நான் எடுத்த சிறந்த முடிவு. 2023 ஆம் ஆண்டில் அடுத்தடுத்த சாகசங்கள் தொடரும் எனக் கூறியுள்ளார்