Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் பணிவு பிடிச்சிருக்கு…. பிரபல இயக்குனர் ராஜமௌலி பேட்டி…!!!

பிரபல இயக்குனர் ராஜமௌலி நடிகர் அஜித்தின் பணிவு பிடித்திருந்ததாக கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”. மேலும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டிடிவி நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து ‘RRR’ திரைப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் ராஜமவுலி நடிகர் அஜித்தை ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்த போது அவருடைய பணிவு தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக கூறியுள்ளார். மேலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் தனது பட்டப் பெயரான தல என்ற பெயரைத் துறந்து தன்னை அஜித் என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டதையும் கூறினார்.

Categories

Tech |