தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித்.
அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஈடுபட்ட அஜித், அதன்பின் வந்த முடிவுகளில் இரண்டு பிரிவில் பத்து இடங்களுக்குள்ளும், ஒரு பிரிவில் 12ஆவது இடமும் பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
A video of Thala #Ajith sir at Delhi shooting competition.
| Credit: @arianoarun | #Rifleshooting | #Valimai | #Ak60 | #Thala60 | #Nerkondapaarvai | #Viswasam | pic.twitter.com/mO3S6md2MG
— Ajith | Dark Devil (@ajithFC) October 22, 2019