Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த மலை எனக்கு ரொம்ப பிடிக்கும்…. நடிகை சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ…!!

பிரபல நடிகை சமந்தா இந்த மலைக்கு தான் என்னை பற்றி அதிக விஷயம் தெரியும் என்று ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பல்லாவரம் பகுதியில் சமந்தா காரில் செல்லும்போது அங்குள்ள மழையை வீடியோ எடுத்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் இந்த மலை தெரியும்.

இந்த மலைப்பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான இடம். மற்ற மனிதர்களை விட இந்த மலைக்கு தான் என்னை பற்றி அதிக விஷயம் தெரியும். இங்குதான் எனது முதல் காதல், காதல் முறிவு, தோழியின் மரணம், அழுகை என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CL0jyEAAf_e/

Categories

Tech |