கொரோனா காலகட்டத்தில் சிம்பு 27 கிலோ உடல் எடையை குறைத்ததாக தெரிவித்திருக்கிறார்.
சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், சிம்பு இந்த படத்தை தெலுங்கில் புரமோட் செய்வதற்காக நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் கொரோனா காலகட்டத்தில் நான் 27 கிலோ உடல் எடையை குறைத்ததாக தெரிவித்திருக்கிறார்.