Categories
தேசிய செய்திகள்

“I Love U” சொல்லி வரிசையாக முத்தமிட்டு….. நகர்ந்தால் பைப்பால் அடி தான்….. மாணவர்களில் ராகிங் அட்டூழியம்….!!!!

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் மாணவி ஒருவரை மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் மாணவியை ராகிங் செய்கிறார்கள். ஐ லவ் யூ என்று கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் பொழுது பிளாஸ்டிக் பைப்பால் அந்த மாணவியை அடிப்பதாக மிரட்டலும் விடுக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலானதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராக்கிங் செய்த மாணவனை கைது செய்துள்ளார்கள். மேலும் கைது செய்யப்பட்ட மாணவர் மீது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் உள்ளன. மேலும் மற்ற மாணவர்களின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தற்போது அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |