3:33 படத்தின் கதாநாயகி ஸ்ருதி செல்வம் தனது ஆரம்ப வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிக்பாஸ் புகழ் சாண்டி. ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள படம் 3:33. இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக குறும்பட நடிகை ஸ்ருதி செல்வம் அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து அவர் கூறியதாவது, எனது நடிப்பு குறும்படம் மூலம் தான் தொடங்கியது எனவும், தொடக்கத்தில், ”நீ எல்லாம் ஏன் நடிக்கிறாய்” என்று கிண்டல் தான் செய்தார்கள். நிறைய அவமானங்களை சந்தித்தேன். ஆனால், அதையெல்லாம் இப்பொழுது பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு இந்த படத்தில் நடிக்கிறேன் என்றார்.