நயன்தாராவுடன் பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
https://www.instagram.com/p/CZkZdCzhcZ6/
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது நயன்தாராவுடன் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மிகப்பெரிய விடுமுறை எடுக்க காத்திருப்பதாகவும், மேலும், நயன்தாராவுடன் பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.