Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் தோற்று விடக்கூடாது…..! பக்கா ஸ்கெட்ச் போட்ட ட்ரம்ப்…. மாறப்போகும் முடிவுகள் …!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக டிரம்ப் நீதிமன்றம் சென்ட்ரல் அவருக்கு சாதகமான உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனா ? டொனால்ட் டிரம்ப்பா ? யார் அமெரிக்க அதிபராக போகிறார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை ஆளப்போவது யார் ? என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை அதிபராக இருந்து விட்டு….. அதிபராக இருக்கும் போதே தோல்வியை சந்திக்க கூடிய 10 அதிபராக டிரம்ப் இருக்கப் போகிறாரா ? கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்ப் ஆட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு என்ன என்பது ? போன்ற பல்வேறு முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். வழக்கமான தேர்தல் நடைமுறைகளாக இருந்தால் நேற்றே விடை கிடைத்திருக்கும்.

120ஆண்டுகள்…. 67% வாக்குப்பதிவு:

இந்தத் தேர்தலானது இதற்கு முன்னால் நடந்த தேர்தலை விட மிக மிக வித்தியாசமான தேர்தலாக இருக்கின்றது. 120 ஆண்டுகளுக்கு பிறகு 67% பதிவாகியிருக்கின்றன. இது மிக மிக அரிதான விஷயம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் நடந்த வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.தற்போது வரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவைப்படுகின்றன.

ஸ்விங் ஸ்டேட்ஸ்:

அசோசியேட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய பாரம்பரிய செய்தி நிறுவனம் அளித்து இருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில், வெற்றியை தீர்மானிக்கும் விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய இரு மாநிலங்கள் ( ஸ்விங் ஸ்டேட் ) என்று சொல்வார்கள். அந்த மாநிலங்களில் நேற்று  டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்தார். ஆனால் படிப்படியாக இந்த மாநிலங்கள் இரண்டுமே ஜோ பைடன் பக்கம் சாய்ந்து இருக்கின்றன. இதன் காரணமாக ஜோ பைடனுடைய தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

டிரம்ப் ஏற்க மறுப்பு:

ஆனால் இந்த இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்கவில்லை. மற்றொரு முக்கியமான மாநிலமான 20 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய பென்சில்வேனியா மாநிலத்தினுடைய வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்த வேண்டும்.  மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவத வேண்டும் என்ற கோரிக்கை டிரம்ப் தரப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய அரிசோனா மாநிலத்தில் 11 தேர்தல் சபை முடிவுகளையும் டிரம்ப் தரப்பு ஏற்க மறுத்து, மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம்:

தற்போதைய நிலவரப்படி இதற்கு அடுத்து என்னவாக இருக்கும் என்றால் ? தேர்தல் முடிவை ஒரு வேட்பாளர் ஏற்கவில்லை என்றால் ஆட்சேபணை தெரிவிக்க முடியும், நீதிமன்றத்தை நாட முடியும். முதல் கட்டமாக தேர்தல் அதிகாரிகள் மட்டத்தில் இந்த ஆட்சேபம் நிறைவேற்றப்பட்டு, மறு வாக்கு எண்ணிக்கை வைக்கப்படும். மறு வாக்கு எண்ணிக்கை முடிவும் மறுக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம். நீதி மன்றத்தை பொருத்த வரை அந்த மாநிலத்தில் ஒரு நீதிமன்றம் இருக்கிறது. அதைத்தாண்டி தேசிய அளவில் வாஷிங்டனில் உச்ச நீதிமன்றம் இருக்கிறது.

டிரம்ப்புக்கு சாதகம்:

வாஷிங்டனில் இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தில் தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும். அந்த உச்சநீதி  மன்றத்தை பொருத்த வரை மொத்தம் 9 நீதிபதிகள் இருக்கிறார்கள்.  அண்மையில் கூட ஒரு நீதிபதியை டொனால்டு டிரம்ப் நியமித்தார். அவருடன் சேர்த்து ஆறு நீதிபதிகள் பழமைவாத போக்கு கொண்ட நீதிபதிகள்…. அதாவது ட்ரம்புக்கு ஆதரவளிக்கக் கூடிய நீதிபதிகளாக கருதப்படுபவர்கள் 6பேர் இருக்கின்றார்கள். 9 நீதிபதிகள் சேர்ந்து வழக்கு வழங்கக்கூடிய தீர்ப்பில் 6 : 3 என்ற அடிப்படையில் டிரம்புக்கு சாதகமான ஒரு தீர்ப்பு வழங்கக் கூடும் என்று பல வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

டிரம்ப்புக்கு வாய்ப்பு:

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக இறுதி தீர்ப்பு நீதிமன்றத்திற்குச் செல்லும் போது அதன் காரணமாக டிரம்ப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதனால் ஒரு குழப்பமான சூழலை நோக்கி அமெரிக்க தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி டிரம்ப் நேரடியாக தோல்வியை ஒப்புக்கொண்டு ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தால் உடனடியாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் டிரம்ப் முடிவுகளை ஏற்காமல் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில் முடிவுகள் வர சில காலமோ அல்லது  ஒரு வாரமோ, ரெண்டு வாரமோ அல்லது ஒரு மாத காலமோ ஆகும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

Categories

Tech |