ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. நான் ஒன்று கேட்கிறேன் நண்பர்களே… மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி. கல்வி மொழியாக இந்தி. அலுவல் மொழியாக இந்தி என்ற சாதாரணமான போக்கில் நீங்கள் புரிந்து கொண்டு போய்விட முடியாது.
ஐ எஃப் எஸ் என்று சொல்லக்கூடிய இந்தியன் அயல்ரக தேர்வு முழுக்க இந்தியில் இருக்க வேண்டும், அவை இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியே நிகழ்கின்ற இந்திய அயல்ரக உறவு, இந்திய தூதரகங்கள் முழுக்க இந்தியில் இயக்க வேண்டும் என்றால், அங்கே இருக்கின்ற தமிழன், அங்கு இருக்கின்ற பஞ்சாபி, அங்கு இருக்கின்ற மலையாளி,
அங்கிருக்கின்ற கன்னடன், அங்கு இருக்கின்ற தெலுங்கன், அந்த நாட்டுக்குள்ள அவனுக்கு ஒரு தீங்கு வந்தால், அந்த தூதுவ ஆணையத்த்தை தேடிச் சென்றால், இந்தி தெரிந்திருந்தால் தான் அவர் அங்கு உதவி பெற முடியும். இந்தி தெரிந்திருந்தால் தான் அவன் உரையாட முடியும், உறவாட முடியும். பிணத்தை தன் நாட்டுக்கு அனுப்புவதற்கு கூட அவன் இந்தி தெரிந்திருக்க வேண்டும். இது சரியா ? என்று கேட்கிறோம்.
இது சரியா முடிவா என்று கேட்கிறோம்.மத்திய அரசின் அலுவலக மொழி இந்தி. இந்தி தெரியாதவன் மத்திய அரசின் பணிகளில் இனி இடம்பெற முடியாது என்ற ஒரு நிலைமையை மெல்ல மெல்ல திணிக்க பார்க்கிறார்கள். இன்றைக்கு தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள், ஆங்கிலம் அறிந்தவர்கள் என தெரிவித்தார்.