Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இதற்காக நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5ம் தேதி ஓராண்டுக்கு பின்னர் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3வது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு விஷயத்தில் ஏமாற்றமே என்று தெரிவித்தார். ஆனால் அதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை. இந்த நிலையில்

இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு என கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என நான் சொன்னது பலவிதமாக வெளியே வந்தன என்றும் மாவட்ட செயலாளர்கள் மூலம் எதுவும் வெளியே வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏமாற்றம் என நான் குறிப்பிட்டது என்ன என்பது குறித்தும் கட்சி குறித்த கண்ணோட்டம் பற்றியும் தெரிவிக்கவே இந்த சந்திப்பு என விளக்கம் அளித்துள்ள ரஜினிகாந்த், 2017ல்தான் அரசியலுக்கு வருவேன் என கூறினேன், அதற்கு முன் நான் அப்படி கூறியதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது என ரஜினிகாந்த தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது என்று கூறிய அவர், புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் 30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கும், 60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |