Categories
உலக செய்திகள்

“என்னடா ஒரே நாற்றம்” பீட்ஸாவுடன் பாம்பு சேர்த்து….. சமைத்த தம்பதிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தம்பதிகள் ஒருவர் பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பை சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கண்டாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. இத்தகைய பாம்பு நாம் வாழும் வீட்டிற்குள் வந்தால் கொலையே நடுங்கும். பாம்பு வீட்டின் குளிர்சாதன பெட்டி, கழிப்பறை போன்ற இடங்களில் புகுந்துள்ளதை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே பாம்பு  ஒன்று சமையல் அறையில் உள்ள ஓவனில் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் உள்ள வேக் வனப்பகுதியை சேர்ந்த தம்பதிகள் அம்பர் மற்றும் ராபர்ட். இவர்கள் நண்பர்களுடன் பீட்ஸா சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளனர். பின்னர் இருவரும் பீட்ஸா சமைக்க தேவையான பொருட்களை தயார் செய்துள்ளனர்.

தங்கள் வீட்டில் இருந்த ஓவனில் பீட்ஸாவை சமைத்துள்ளனர். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து புகையுடன் கூடிய கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவர்கள் எங்கிருந்து இந்த துர்நாற்றம் வீசுகிறது? என்று பார்த்துள்ளனர். பின்னர் இது சமையல் அறையில் இருந்துதான் வருகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஓவனை திறந்து பார்த்த போது பீட்ஸாவுடன் பாம்பையும் சேர்த்து சமைத்தது தெரியவந்துள்ளது. இதை பார்த தம்பதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தற்போது இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Categories

Tech |