Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இடக்கை கட்டைவிரல் காயத்துடன்தான் ஆஷஸ் தொடரில் ஆடினேன்!

கடந்தாண்டு ஆஷஸ் தொடரில் இடக்கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்துடன் தான் விளையாடியதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைத் தக்கவைத்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அதில் அனுபவ வீரர் பீட்டர் சிடில் ஆஷஸ் தொடருக்காக ஓராண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து பீட்டர் சிடில் பேசுகையில், ”கடந்த ஆஷஸ் தொடர் சிறப்பாக அமைந்தது. அந்தத் தொடரின் எட்ஜ்பாஸ்டன் போட்டியின்போது வீசிய முதல் ஸ்பெல்லில் எனது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. அதனோடுதான் பின் போட்டியில் பங்கேற்றேன்.

கிரிக்கெட் விளையாட்டின்போது காயங்கள் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆஷஸ் தொடரின்போது நான் என்னை வயதானதாகக் கருதினேன். எனவே என்னிடம் கிரிக்கெட் ஆடுவதற்கு அதிகமான நேரமில்லை எனத் தெரியும்.

அதனால் எவ்வளவு முடியுமோ அத்தனை ஆட்டங்களையும் ஆடவிரும்பினேன். ஆஷஸ் தொடரின்போது ஆஸ்திரேலிய அணிக்கு எனது தேவை ஏற்பட்டது; அதனால் பங்கேற்றேன்” என்றார்.

சமீபத்தில் பீட்டர் சிடில் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |