Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு சுத்தமா பிடிக்கல”….. நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கமிட்டாகிட்டு இருக்க”…. உதயநிதியை கண்டித்த Mrs. ஸ்டாலின்….!!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்தார். ஆனால் நடிகர் கமல் தயாரிப்பில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் நான் சினிமாவில் நடிப்பது என்னுடைய அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உதயநிதி மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என தன்னுடைய அம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் கமல் தயாரிப்பில் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் துர்கா ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாயே என்று கேட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். மேலும் நான் தற்போது நடிப்பது என்னுடைய அம்மாவுக்கு கண்டிப்பாக பிடிக்காது என்று தான் நினைக்கிறேன் என்றும்  கூறியுள்ளார்.

Categories

Tech |