அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிவகாசி தொழிலாளர்களிடம் போய் நம்ம ஊரு எப்படி இருக்கு என்று கேளுங்கள் ? நம்ம ஊர் இப்போது மிகவும் கெட்டுப் போச்சு என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது, எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எல்லாம் சோதனை, சோதனையாகவே இருக்குது. பட்டாசு ஆலையில், தீப்பெட்டி ஆலையில் ரெய்டு… தீப்பெட்டி ஆலையில் ஜிஎஸ்டி வரியை நான் தான் குறைத்தேன்.
18 சதவீதமாக இருந்தால் தொழில் போய்விடும் என்றார்கள், அதை 12 சதவீதமாக மாற்றுவதற்கு டெல்லி சென்று, நிர்மலா சீதாராமனை பார்த்து கோரிக்கை வைத்து மாற்றினோம். நானும் டெல்லி போனேன், நிர்மலா சீதாராமனை பார்த்தேன், 12% ஆக குறைத்தேன். பட்டாசு 28 சதவீதமாக இருந்தது ஜிஎஸ்டி வரி, அதை வந்து 18 சதவீதமாக குறைத்தேன், தொழிலை பாதுகாத்தோம், தொழிலாளர்களையும் பாதுகாத்தோம், தொழில் செய்பவர்களையும் பாதுகாத்தோம். இப்போது எல்லாம் போச்சு, வீணா போச்சு, வெட்டியா போச்சு.
பட்டாசு தொழிலாளர்களை பாருங்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் எதோ மது விற்பவர்கள் போல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள், கள்ள சாராயம் விற்பவர்கள் மாதிரி, ஆன்லைன் சூதாட்டத்தை செய்கிறது போல பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை, அந்த அளவிற்கு பிரச்சனை. அரசாங்கத்தில் இருந்து பல பிரச்சனை. தொழிலாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பாதுகாப்பு கிடையாது என தமிழக அரசையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்தார்.