தன்னை பற்றிய தமிழக முதல்வரின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடியும், எதிர்க்கட்சித் தலைவரான மு.க ஸ்டாலின் இருவரும் தற்போது வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுநிவர் புயலால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் மக்களுக்கு ஸ்டாலின் உதவி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் திமுக இருக்கும். மேலும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
குடிமராத்து பணியில் எடப்பாடி அரசு சாதனை செய்யவில்லை ஊழல்தான் செய்து வருகிறது என்றும் கூறினார். மேலும் சாதிவாரியான கணக்கெடுப்பு ஆணையம் என்பது அரசியல் செய்யும் நாடகம் என்று குற்றம் சாட்டினார். இவ்வாறு ஸ்டாலின் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும் ஸ்டாலினை, முதல்வர் எடப்பாடி “அறிக்கையின் நாயகன்” என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பத்தி அளிக்கும் வகையில், “ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதுதான், எதிர்க்கட்சியினரின் வழக்கம்.
அதுவே வேலை, அதுதான் அரசியலின் மரபு. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். முதல்வர் அவர்கள் எனக்கு சூடியிருக்கும் பட்டம் “அறிக்கை நாயகன்” என்றால், எடப்பாடி பழனிசாமி “ஊழல் நாயகன்” என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் திமுகவின் ஆர். ராசா மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஸ்டாலின், “ராசா மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த ஜெயலலிதாமற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது” என்று சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.