Categories
மாநில செய்திகள்

“உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன்”… அனைவரும் மதிக்க வேண்டும்… நடிகர் ரஜினிகாந்த்..!!

 உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image result for ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,  உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மதவேறுபாடின்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்! என்று தெரிவித்தார்.

Categories

Tech |