ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுபவர்கள் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ மட்டும்தான் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்படி நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை விசாரிக்க காவல்துறை முன்வந்தது. கிரிஸ்டொபரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், முகநூலில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தும் அல்லது வரும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்க்களை அக்சப்ட் செய்த பின்னும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியும் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தும் தான் அவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.