செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திட்டங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் இருக்க வேண்டும். அதிமுகவில் வந்த குழப்பங்களை சரி செய்து ஓபிஎஸ் அவர்களை அன்றைக்கே இணைத்து அதிமுக ஆட்சி தொடர நான் காரணமாக இருந்த காரணத்தால், அப்போதே நான் திமுகவால் குறி வைக்கப்பட்டேன். எடப்பாடியார் நாலு வருஷமா அற்புதமா ஆட்சி செய்தார். அற்புதமாக இருந்த அதிமுக ஆட்சி திட்டம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு தான் இன்னைக்கு இதற்கு தான் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்கிறது. ஸ்டாலின் முதலமைச்சர் ஆன திட்டங்களை செயல்படுத்துவதற்கும், கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றத்திற்கும் கவனம் செலுத்தனும். திமுக அது எதுவுமே பண்ணல. இன்றைக்கு மின்கட்டண உயர்வு இரண்டு நாளா ஊடகத்தில் போட்டு இருக்காங்க. இதை எல்லாம் திசை திருப்ப இந்த ரெய்டு நடக்கின்றது. தொடர்ந்து பொய் வழக்கு போடுறாங்க. இது முடிஞ்சா இன்னொரு பொய் வழக்கு போட்டு விடுறாங்க.
எடப்பாடி யார் அவர்கள் இங்கே கோயம்புத்தூருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தார். அப்போது மிகப்பெரிய எழுச்சி, கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டத்தில் அவ்வளவு பெரிய வரவேற்பு, அவ்வளவு பெரிய பொதுமக்கள் கூட்டம். இதை எல்லாம் பொறுக்க முடியாமல் திமுக அரசு இப்படி செய்து என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.