ஆற்காடு அருகே 100 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வரும் கோபி நாராயணபுரத்தில் விவசாய நிலத்தில் தனது கார் ஓட்டுனர் தினேஷ் உதவியுடன் காரை ஓட்ட பழகியுள்ளார்.
அப்போது வரப்பில் சிக்கிக் கொண்ட காரை கோபி ரிவல்ஸ் எடுத்தபோது பின் நோக்கி சென்ற வேகமாக கார் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓட்டுநர் தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.