Categories
சினிமா

நான் அன்னைக்கே சொன்னேன்…. ஆனா யாருமே என்னை நம்பல…. ஜெ. மரணம் கஸ்தூரியின் டுவீட்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சட்டப் பேரவையில் நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்தது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் சிகிச்சை குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் கே.எஸ் சிவகுமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரை குற்றவாளிகளாக சுட்டிக்காட்டி அவர்களிடமும் விசாரணை நடத்தவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதோடு ஜெயலலிதா இறந்ததாக சொல்லப்பட்ட நாளிலும் முரண்பாடுகள் இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மதியம் 3 முதல் 3:30 மணிக்குள் இறந்திருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு செய்ததை தற்போது நினைவுகூர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி தான் பதிவு செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனவும், ஆனால் சில கிசு கிசுக்கள் பரவியதன் காரணமாக நான் அதை கடுப்பில் டெலிட் செய்து விட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார். ஆனால் பேஸ்புக் லிங்க் மட்டும் அப்படியே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளையும் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு செய்து அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |