Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் போடல”….. ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடுவாங்களா….? டென்ஷனான சரத்குமார்….!!!!!

சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டும். ரம்மி மட்டும் சூதாட்டம் கிடையாது. கிரிக்கெட் கூட சூதாட்டம் தான்.

அனைவருமே விளையாட்டை வைத்து சூதாடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான், தோனி போன்றோரும் நடிக்கிறார்கள். சரத்குமார் சொன்னால் மட்டும் எப்படி மக்கள் விளையாடுவார்கள். எனக்கு ஓட்டு போடுங்கன்னு கூட தான் சொல்றேன். ஆனா யாருமே போட மாட்டாறாங்க. மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டம் இயற்றுவது என்பது அரசின் கடமை. நான் சட்டம் இயற்றுவதற்கு முன்பாக தான் விளம்பரத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |