ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே என்ற வருத்தம் இருக்கா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா,
ஒன்னு வச்சுக்கோங்க. எல்லோருடைய மனதும் ஒரே மாதிரி இருக்காது. நீங்க இப்போ என்ன கொண்டு போயி எந்த இடத்தில ? எந்த உயரத்தில் உட்கார வச்சீங்கனாலும், நான் என்னோட பாதத்தை பார்த்து தான் நடப்பேன். அதனால ஒவ்வொருடைய மனசிலும், செயல்பாடு மாறும்போது நீங்களும் ஒன்னு செய்ய முடியாது. நானும் ஒன்று செய்ய முடியாது.
எடப்பாடி பழனிசாமி , ஓபிஎஸ் விமர்சனம் வைத்துக்கொண்டு வருவது குறித்து பேசிய சசிகலா,
இருவரும் தனித்தனியாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். என்னை பொறுத்த வரைக்கும் ஒரு தாய் எப்படியோ, அந்த ரோலை தான் நான் செய்கிறேன். அதனால எல்லோருக்கும் பொதுவான ஆளா தான் நான் இருக்கேன். இப்பயும் அவங்க சைடு, இவுங்க சைடு அப்படி கிடையாது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் இல்ல திருமணமாக இருக்கட்டும், எல்லா நிகழ்ச்சிக்கும் எனக்கும் அழைப்பிதழ் வருது. நானும் வாழ்த்துச் செய்தி எல்லாம் அனுப்பிட்டு தான் இருக்கிறேன்.
தொண்டர்களை பொறுத்த வரைக்கும் யாரையுமே பிரிச்சு பாக்கல. ஒரு பலன் பெற்றவர்கள் தனியா பிரிச்சி இருக்கலாமே ஒழிய, தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுக்கிறதுதான் என்னைக்குமே நிரந்தரமானது. அதுதான் எங்க புரட்சித்தலைவர் காட்டிய வழி, அந்த வழியில் தான் அம்மாவும் செயல்பட்டார்கள். நானும் அதே வழியில் தான் இருக்கிறேன்.
எனக்குன்னு தனி ஆளு யாரும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் எல்லா மாவட்டத்தை சேர்ந்தவர்களானாலும் சரி, எல்லா இனத்தை சேர்ந்தவங்களும் சரி… எல்லோருமே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு தாய் மக்களாக தான் தலைவரும் நடத்தினார். அம்மாவும் நடத்தினாங்க. நானும் அந்த வழியில் தான் நடத்துறேன் என தெரிவித்தார்.