Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவை நடிக்க வச்சே ஆகணும்… வேற லெவலுக்கு வளர்ந்துட்டாரு…. புகழ்ந்து தள்ளிய விஜய்…!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், படத்தில் வில்லன் என்று சொன்னால் நமக்கு நிறைய பேர் ஞாபகம் வருவார்கள். ஆனால் செல்லம் அப்படின்னு சொன்னா இவர் பேரு மட்டும் தான் ஞாபகம் வரும். அது நம்ம முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜ் சார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த  படத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கின்றோம்.சிவகாசி, போக்கிரி, கில்லி மாதிரி இதிலும் அந்த காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகின்றேன் சார்.

அடுத்ததாக என்னுடைய பிரதர்ஸ் ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் சார். ஸ்ரீகாந்த் சார் 100 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த விட்டு எந்த ஈகோவும் பார்க்காமல் எனக்கு சகோதரராக நடித்திருக்கின்றார். படம் ஆரம்பிக்கும் போது ஒரு சகோதரர் என்று தான் இருந்தோம். அது போக போக உண்மையிலேயே சகோதரராக மாறிவிட்டது. அடுத்ததாக ஷாம். குஷி திரைப்படத்திலிருந்து அவருடன் நல்ல பழக்கம், நல்ல நண்பர். மதியம் லஞ்ச் இருக்கட்டும் இல்ல இரவு டின்னராக இருக்கட்டும். அது ஷாம் இல்லாம நடக்கவே நடக்காது.

சாம் தான் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார். எனக்கு மிகவும் பிடித்தவர் ஷாம் என்று கூறுவேன். தேங்க்யூ ஷாம், தேங்க்யூ ஸ்ரீகாந்த் சார். இது மாதிரியான நிறைய ஹீரோக்கள் நடித்திருக்கின்றார்கள். சரத்குமார் சார், ஷாம், ஸ்ரீகாந்த் சார் நிறைய ஹீரோக்கள் நடித்து இருக்கின்றார்கள். ஆனா யோகி பாபு மட்டும்.. அவரும் ஹீரோதான். அவர பத்தி சொல்லனும்னா, ஒரு காலத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். ஒரு படத்துலயாவது நம்ம தலையை காட்ட வேண்டும். ஆனா இப்ப தங்களுடைய படத்தில் யோகி பாபுவை நடக்க வச்சே தீரனும் என்ற சூழ்நிலை மாறி உள்ளது. இந்த வளர்ச்சி உண்மையிலேயே சந்தோஷம் யோகி என பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |