தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புவதாக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவையில் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை கேஎஸ் அழகிரியுடன் தொடங்கிய ராகுல்காந்தி தமிழகத்தின் கலாசாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் ஒரு மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன். உலக தமிழகத்தை உற்று நோக்க வேண்டும். தமிழர்களின் உரிமைகளை எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார்.