Categories
மாநில செய்திகள்

“தமிழ் வேண்டாம்” இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்- தெற்கு ரயில்வே அதிரடி..!!

ரயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேச வேண்டாம் என்றும், இந்தி அல்லது ஆங்கில மொழியினை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது 

சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.

Image result for SOUTHERN RAILWAY

இந்நிலையில்   தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம். மொழி பிரச்னையால் யாருக்கேனும் புரியாமல் இருப்பதை தவிர்க்க ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Categories

Tech |