செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசங்கள் என்பதை அள்ளித்தெளித்து, அதன் மூலமாக ஜனநாயகத்தை கேளி கூத்தாக்கி, அதன் மூலமாக வளர்ச்சி பாதையில் சென்று இருக்கக்கூடிய ஒரு நாட்டை இலவசங்களை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் தவிர, ஒரு குடிமகனுக்கு அரசு தன்னுடைய கடமையாக செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி, அது இலவசம் என்று யாரும் பேசவில்லை.
மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு விஷயம், அது அரசனுடைய கடமை. அது சுகாதாரமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம், குடிநீராக இருக்கலாம், அது எல்லாம் பொது பொருட்கள். ஒரு பெஸ்ட் மாடல் என்கின்ற போது கல்வி என்பது இலவசமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெஸ்ட் மாடல். கல்வி என்பது நூறு சதவீதம் இலவசமாக இருக்க வேண்டும், அது இங்கிலாந்து அமெரிக்காவில் இருக்கிறது, அங்கே எல்லாம் தனியார் பள்ளிகளுக்கு வேலையே கிடையாது.
U.K-வில் பார்த்தீர்கள் என்றால் சுகாதாரமே, நேஷனல் ஹெல்த் ஸ்கீமில் இலவசமாக இருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களுடைய அடிப்படை உரிமையாக கல்வி, சுகாதாரம் இலவசமாக மக்கள் வரி கட்டுகின்றார்கள், கிடைக்க வேண்டும். வரி கட்ட முடியாதவர்களுக்கும், வரி கட்ட முடிந்தவர்கள் தங்களுடைய பங்காக கொடுக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்துடைய ஒரு வேராக இருக்கிறது. அதை பற்றி பாரதிய ஜனதா கட்சியோ, கட்சியின் தலைவர்களோ எங்கேயும் பேசவில்லை, இதற்கு உதாரணமே நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் என பெருமைபட்டுக் கொண்டார்.