Categories
உலக செய்திகள்

“நான் ஏமாந்து விட்டேன்”… நடிகர் ஆர்யா மீது இலங்கை தமிழ் பெண் புகார்… சர்ச்சையால் பரபரப்பு…!

இலங்கை தமிழ் பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான விட்ஜா என்பவரிடம் நடிகர் ஆர்யா பணம் வாங்கி ஏமாற்றியதாக அப்பெண் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விட்ஜா கூறியதாவது, ஆர்யா கொரோனா லாக்டோன் காரணமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார்.

அதனால் தனக்குப் பணக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறினார். அதன்பின் சில மாதங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது அவர் என்னை போல பல பெண்களை ஏமாற்றி உள்ளார் என்பது. இதை தொடர்ந்து அவர் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டேன்.

அப்போது ஆர்யாவின் தாயார், என்னை ஸ்ரீலங்கா நாட்டு நாய் நீ, என்றும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். ஆகையால் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த புகாரை அளிக்கிறேன். பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் இதில் தலையிட்டால் எனக்கு நிதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் நான் ஆர்யாவைப் பற்றி புகார் அளித்தால் அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக என்னை பலமுறை மிரட்டியுள்ளார். ஆனால் இனி அவர் எப்படிப்பட்ட நாடகம் போட்டாலும் நான் புகாரை வாபஸ் வாங்கப் போவதில்லை. கடந்த சில வருடங்களாக நான் பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் வேண்டும். ஆகையால் தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |