Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்… கத்தியை காட்டிய இளைஞன்… அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள தினைக்குளம் பகுதியி முத்துக்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்காக திருப்புல்லாணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரை வழிமறித்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி முத்துகுமாரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் உச்சிப்புளி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர் பிரப்பன்வலசையை சேர்ந்த விசுவநாதன்(19) என்பது தெரியவந்துள்ளது. மேலுரம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |