கருப்பாக இருப்பதால் தான் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
யோகா கலையின் வல்லுநரும், பிரபல பதஞ்சலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவருமான யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் சமீபத்தில் தனக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து சிறப்பு பேட்டியை பிரபல நிகழ்ச்சி ஒன்றில் அளித்திருந்தார். அதில் தான் கருப்பாக இருப்பதாகவும், அழகாக இருந்திருந்தால் யோகா துறையில் தன்னுடைய உன்னதமான பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உன்னதமான பங்களிப்பினால் இதுவரை பலருக்கு யோகா மூலமாக புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது கருத்து நகைக்கும் விதமாக இருப்பதாக பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலமாக இவரை விமர்சித்து வருகின்றனர்.