மக்களவையில் விவாதத்தின் போது குறுக்கிட்ட ராகுலை டியூப்லைட் என மறைமுகமாக விமர்சித்தார் பிரதமர் மோடி.
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று உரையாற்றினார். அப்போது அவர் நிதிப் பற்றாக்குறையை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும், இதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றார்.
மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறுக்கிட்டார். அதற்கு பிரதமர் , 30- 40 நிமிடங்கள் கடந்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் சில டியூப் லைட்டுக்கு அது இப்போதுதான் சென்றடைகிறது என்று மறைமுகமாக விமர்சனம் செய்தார்.