பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 முறை பார்த்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு நானும் ரவுடிதான் படத்தை 100-வது முறை பார்த்தபோது விஜய் சேதுபதிக்கு போன் செய்து நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினாராம்.
அதோடு உங்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அந்த ஆடிஷனில் நான் கலந்து கொள்வேன் என்றும் ஜான்வி கூறியுள்ளார். இதைக் கேட்ட உடன் நடிகர் விஜய் சேதுபதி ஐயோ என்று மகிழ்ச்சியில் கூறினாராம். மேலும் நடிகை ஜான்வி கபூர் சொன்னது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு தமிழ் நடிகர் படத்தை பாலிவுட் நடிகை 100 முறை பார்த்ததோடு அவரின் மிகப்பெரிய ரசிகை என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.