Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலையை வரவேற்கிறேன்”…. திமுக எம்.பி ஆ. ராசா ஒரே போடு…!!!!

கோவை கொடிசியா அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்ட போது, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இது குறித்து முதல்வரிடம் நான், கோவை மாவட்ட ஆட்சியர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் பேசியுள்ளோம்.

அதன்பிறகு டிட்கோ பகுதியில் வரும் நிறுவனங்கள் மாசு உருவாக்கும் நிறுவனங்கள் கிடையாது. ஒருவேளை மாசு உருவாக்கும் நிறுவனங்களாக இருந்தால் அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காது. இந்நிலையில் தொழிற் பூங்கா அமைப்பதற்கு கம்பெனி நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் நிலையில், மக்கள் தாங்களாகவே கொடுத்தால் மட்டும்தான் நிலம் வாங்கிக் கொள்ளப்படும். மற்றபடி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு ஒருபோதும் கிடையாது. அன்னூரில் டிட்கோ அமைப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்பதால் ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை முறியடிக்க வேண்டும்.

அண்ணாமலை செய்யும் அரசியல் எனக்கு புரியவில்லை. தொழில் முனைவோர்கள் நாங்குநேரியை விரும்பாத போது நம்மால் என்ன செய்ய முடியும். மக்களின் எதிர்ப்புகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அவர்களின் பக்கம் தான் இருப்போம். திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணாமலை சொன்னதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்த்து வைப்பதோடு பிரச்சனை என்றால் மக்களின் பக்கம் நிற்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |