Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இப்படித்தான் நடிப்பேன்…. நடிகை நயன்தாராவின் திடீர் முடிவு….!!!

நடிகை நயன்தாரா எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி தான் இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கேற்றவாறு தான் அவர் இப்போது கதைகளையும் கேட்டு வருகிறார். இதற்கு உதாரணமாகச் சொல்ல போனால் அவர் தற்போது நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ திரைப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகத்தான் இருக்கிறது.

Categories

Tech |