கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர் மருமகளை கட்டிப் பிடித்து தொற்றை பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொருநாளும் கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பலரும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனதளவில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இப்படியிருக்கும் பொழுது தெலுங்கானா மாநிலம், ராஜஸ்தான், சிர்சில்லா என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சகோதரி வீட்டில் தனிமை படுத்தி இருந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொற்று எப்படி பரவியது என்பது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதில்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது கணவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். என் மாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். அவருக்கு சாப்பாடு தனியாக வழங்கி வந்தோம். பேரக் குழந்தைகளையும் அவர் அருகில் அனுமதிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இதனால் வெறுப்படைந்த அவர் நான் இங்கு தனிமையில் இருக்கும்பொழுது நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்று கோபமாக கேட்டு பின்னர் ஓடி வந்து என்னை கட்டி பிடித்து கொண்டார். இதனால் எனக்கும் தொற்று பரவியது. பின்னர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். நான் என் சகோதரி வீட்டிற்கு வந்து தனிமைப் படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.