தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்ற நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். கடந்த சில நாட்களாகவே நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த செய்திகளை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நடிகை நிக்கி கல்ராணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தன்னுடைய கர்ப்பம் குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னை பற்றி எனக்கே தெரியாமல் இவ்வளவு பெரிய விஷயம் பரவி வருகிறது. எனக்கு பதிலாக வேறு சிலர் இந்த அறிவிப்பை வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். கொஞ்சம் டியூட்டேட்டையும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். அதோடு தான் கர்ப்பமாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த அற்புதமான விஷயம் நடந்தால் அதை முதலில் வெளிப்படுத்தும் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.