Categories
அரசியல் மாநில செய்திகள்

இறுதி வரை Vaikoவுடன் இருப்பேன் CM M K Stalinனின் நெகிழ வைத்த பேச்சு ..!!

வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்கக் கூடிய தம்பி துரை ரவி அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமை கழகத்தினுடைய செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

முடிந்த உடனே வைகோவின் கையை பிடித்த சொன்னேன். தம்பி ரொம்ப சிறப்பா பண்ணியிருக்கிறார், அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்று முடிந்தவுடன் சொன்னேன். இரண்டு வருடமாக கஷ்டப்பட்டார் என்பதை வைகோ பெருமையாக சொன்னாரு. மதிமுகவை சார்ந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு புத்தக வெளியீட்டு விழா. என்னை அழைத்து இருந்தார் வைகோ அவர்கள். நான் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சி நான் பேசும்போது கூட சொன்னேன் நான், வைகோ அவர்கள் சமீபத்தில் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து,

தலைவர் கையைப் பிடித்துக் கொண்டு அண்ணா கவலை படாதீர்கள், உங்களுக்கு எப்படி நான் பக்கம் பலமாக பல ஆண்டுகாலம் இருந்தனோ, அதேபோல தம்பி ஸ்டாலினுக்கு இருப்பேன் என்றார். அதைத்தான் சொன்னேன். சொல்லிட்டு பேசும்போது சொன்னேன், நீங்கள் எப்படி எனக்கு துணை இருப்பேன் சொன்னீங்களோ, அதே மாதிரி  நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்று சொன்னேன் என தெரிவித்தார்.

Categories

Tech |