Categories
தேசிய செய்திகள்

“நீ எங்க போனாலும் வருவேன்” 74 முறை கடித்த நல்லபாம்பு…. நபரை விடாமல் துரத்தும்…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் 73 முறை நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மறக்குண்டா கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவர் ஐந்து வயதாக இருக்கும்போது முதல் முறையாக நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுப்பிரமணியம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனாலும் அந்த நல்ல பாம்பு இவரை இன்னும் விடுவதாக இல்லை. இவருடைய ஐந்து வயதில் இருந்து தற்போது வரை சுமார் 74 முறை நல்ல பாம்பு கடித்துள்ளது.

இதனால் பயந்துபோய் சுப்பிரமணியம் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இங்கு தான் இந்த பிரச்சினை என்று நினைத்து பெங்களூருக்கு வேலை தேடி சென்றுள்ளார்  சுப்பிரமணியம். ஆனால் அங்கும் நல்லபாம்பு அவரை தீண்டியுள்ளது. இதனால் மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பிய இவர் வெளியில் போனால் பாம்பு கடித்து விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்.

இப்படி ஒவ்வொரு முறையும் பாம்பு கடிப்பதால் மருத்துவ செலவிற்கு அதிகமாக பணம் தேவைப்படுவதாக இவர் வருத்தப்பட்டுள்ளார். எனவே தான் பிழைப்பு நடத்துவதற்கு அரசு ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். நல்ல பாம்புகள் மட்டுமே சுப்பிரமணியத்தை பின்தொடர்வதற்கு என்ன காரணம் என்பது பலரையும் குழப்பத்திலும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |