Categories
அரசியல் மாநில செய்திகள்

உன்னை வெட்டிப்புடுவேன்…. குத்திப்புடுவேன்… MLAவை மிரட்டிய அமைச்சர் …!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை மிரட்டுவதாக அதிமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிமுக வில் அடிக்கடி ஏதாவது பரபரப்பு நிகழ்வுகள் நடந்து கொண்டே இருப்பதை நாம் அறிந்துள்ளோம். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் எதார்த்தமாக பேசும் சில விஷயங்கள் விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகின்றன. அப்படி பேசும் பட்டியலில் உள்ளவர் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் பேசிய கருத்து தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாமல் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

வெட்டிப்புடுவேன்…. குத்திப்புடுவேன்…. என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தன்னை மிரட்டுவதாக அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியினர் மத்தியில் தன்னை மிகவும் தரக்குறைவாக ராஜேந்திரபாலாஜி பேசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே அமைச்சர் மீது குற்றம்சாட்டி இருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |