Categories
இந்திய சினிமா சினிமா

“தெறி படத்தின் ரீமைக்கை எடுத்தால் நான் செத்துடுவேன்”…. பெண் ரசிகையின் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு….!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தற்போது ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தெறி படத்தின் ரீமைக்கே தான் ஹரிஷ் சங்கர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு சமூக வலைதளங்களில் கலாய்த்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகையான திவ்யஸ்ரீ என்பவர் இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு தற்போது ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நான் இதுவரை கடிதம் ஒருவருக்கு கூட என் வாழ்க்கையில் எழுதியது கிடையாது. ஆனால் தற்போது தற்கொலை கடிதமே எழுதுகிறேன். தெறி  படத்தின் ரீமிக்கேல் தான் தற்கொலை கூடிதத்தை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தெறி படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. எனவே தெறி ரீமைக்கை எடுக்கும் முடிவை விட்டு விடுங்கள்.

ஒருவேளை என்னுடைய தற்கொலைக்கு பிறகு தான் அந்த முடிவை கைவிடுவீர்கள் என்றால் நான் தற்கொலை செய்து கொள்ளவும் தயார் என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் பவன் கல்யாண் ரீமேக் படங்களில் நடிப்பதை அவருடைய ரசிகர்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் தெறி பட ரீமிக்கேக்குக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Categories

Tech |