Categories
உலக செய்திகள்

நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவேன்… -புதிய பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் நாட்டிற்கு நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக கூறியிருக்கிறார்.

ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 200 வருடங்களில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வயதினர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதன்படி நாட்டின் மன்னரான சார்லஸ், ரிஷி சுனக்கை நியமனம் செய்த பிறகு அவருக்கு தீபாவளி பலகாரங்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ரிஷி சுனக், லண்டனில் இருக்கும் பிரதமர் இல்லத்தில் வைத்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் குறிப்பிட்டிருப்பதாவது நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வருங்காலத்தை நம்பிக்கையுடன் காணக்கூடிய நாட்டை உருவாக்குவதற்கு இந்த பதவியில் இருந்து தன்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று உறுதி கூறியிருக்கிறார்.

Categories

Tech |