Categories
சினிமா தமிழ் சினிமா

நான் வெற்றி பெற்றவுடன் “வலிமை அப்டேட்” கிடைக்கும்…. வைரலாகும் அரசியல்வாதியின் ட்விட்…!!

அரசியல்வாதி ஒருவர் நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று ட்விட் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றன. அதன்படி அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரிடம் தொண்டர் ஒருவர் அஜித் நடிக்கும் “வலிமை அப்டேட் எப்ப” என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த வானதி, “நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி” என்று கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |