தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் சரிவர ஓடாத நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா ஹெக்டே தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். நடிகை பூஜா தெலுங்கு மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதன் பிறகு நடிகை பூஜாவுக்கு சமீபத்தில் காலில் அடிபட்டு இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா தற்போது தன்னுடைய காலில் அடிபட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்வில் இரண்டாவது முறையாக நடக்க கற்றுக் கொண்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு விரைவில் குணமாகிவிடும் என்று பூஜாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.